Lens (Tamil)

700.00

புகைப்படத்துறை என்பது எல்லைகளற்ற படைப்பாற்றலைக்கொண்டது. பல்வேறு பிரிவுகளை உளடக்கியது. அதில் அடிப்படையைக் கற்பது மிக அவசியம் ஆகும். அந்தவகையில் இந்த நூலானது லென்ஸ்களின் அடிப்படைப் பிரிவுகளை மிக எளிமையாக விளக்கும் ஒரு தொழில்நுட்ப நூலாகும்.

ஆரம்பநிலைப் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த நூல் ஒரு மிகச்சிறந்த நண்பனாக இருக்கும். விரல்பற்றி அழைத்துச்செல்லும் ஆசிரியராக இருக்கும். பயிற்சிகளை செய்துப் பழக பாடமாக இருக்கும்.

 

இந்த நூலின் ஆசிரியர் திரு.உதயகுமார் அவர்கள் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவர். இளங்கலை அறிவியல் கல்லூரிக் கல்விக்குப் பிறகு திரைப்படத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 1990களில் பிரபல நாவல்களின் அட்டைகளை இவரது படங்கள் அலங்கரித்துள்ளன.

இந்தியாவின் பிரபலாமான ஆளுமையான திரு.பாலுமகேந்திரா அவர்களால் இவரது படம் ஒரு நூலிற்கு அட்டைப்படமாகப் பரிந்துரை செய்யப்பட்டு பிரசுரமாகியுள்ளது.

பிரபல வார இதழ்களில் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றியவர். தமிழகமெங்கும் 60,000 புகைப்படக் கலைஞர்களுக்கு மேல் பயிற்சியளித்துள்ள பயிற்றுனர்.

பல்வேறு கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் வளர்க்கும் பயிற்சிகளை அளித்துள்ளார்.

புகைப்படத்துறை தொடர்பாக ‘அரிச்சுவடி’ மற்றும் ‘லைட்ஸ் ஆன்’ என இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.‘லென்ஸ்’ இவரது மூன்றாவது தொழில்நுட்ப நூல் ஆகும்.

புகைப்படக் கலைஞர், எழுத்தாளர், இயக்குனர், பயிற்றுனர் என பன்முகத்தன்மையை அடையாளமாகக் கொண்டவர்.

தொழில்நுட்ப விவரங்களை, மிக எளிமையாக புரியும்படி எழுதுவது இவரது தனித்தன்மை.

 

– ட்ரீம்புக் பப்ளிஷிங்

Category:

Reviews

There are no reviews yet.

Be the first to review “Lens (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *

× Live Chat!